வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (12:49 IST)

வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: பேரறிவாளன் விடுதலை குறித்து கமல்!

kamal
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் என பேரறிவாளன் விடுதலை குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் இயற்றிய கவர்னருக்கு அனுப்பி வைத்தது 
 
இந்த விஷயத்தில் கவர்னர் மெத்தனம் காட்டிய நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ் திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துக்களை பேரறிவாளனுக்கு  தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் பேரறிவாளன் விடுதலை குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.