திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

பணம் தங்குவதற்கும் வாஸ்து சாஸ்திரம் உண்டா...?

உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற  அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.

வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு  வரும். வடமேற்கில் இருந்தால் பணம் வரும் போகும் ஆனால் நிரந்தரமான கடன்காரனாக வைத்து அல்லல்படுத்தும்.
 
தென்மேற்கு மூலை அதாவது குபேர மூலையில் வடக்கு திசையை பார்த்த மாதிரி பணப்பெட்டி இருந்தால் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு ஏற்படாது செலவுகளை  திட்டமிட்டு செய்து விரயத்தை குறைக்கலாம்.
 
தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும். மேலும் விரய செலவுகளும் கொடுத்தகடன் திரும்பிவராத நிலையும்  இருக்கும். உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும். சாமி அறைதான் பணம்  வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும் போவதுமாக இருக்கும் தங்கவே தங்காது.
 
பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.