இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்:
இன்று அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ரிஷபம்:
இன்று சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
மிதுனம்:
இன்று எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம்; அழகான வாரிசு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கடகம்:
இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
சிம்மம்:
இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கன்னி:
இன்று புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
துலாம்:
இன்று அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
விருச்சிகம்:
இன்று வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வேலைபளு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
தனுசு:
இன்று ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
மகரம்:
இன்று மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். மாணவர்கள் விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
கும்பம்:
இன்று பெரியோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். தொழிலில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம்:
இன்று கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் சேர்ப்பீர்கள். எல்லோரும் மதிப்பார்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5