1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (19:26 IST)

வாஸ்து அடி‌ப்படை‌யி‌ல் ஒரு மனையை தே‌ர்வு செ‌ய்வது எ‌ப்படி?

நமது கனவு இல்லமோ அல்லது ஒரு தொழில் நிறுவனமோ கட்டுவதற்கு முன் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையின் படி ஒரு மனையை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஒரு மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள்.


 

 
 (1)ஒரு மனை வாங்கும் முன் அதன் திசையை அறிந்து வாங்குவது சிறந்தது. ஒரு மனையின் திசையை, திசை காட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். 
 
 (2) கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனையை வாங்குவது சிறந்தது. ஏனெனில் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகளில் வாஸ்து படி கட்டடம் கட்டுவது சுலபமாக இருக்கும். 
 
 (3) ஒரு மனை வாங்கும் போது அதன் வடிவம் சதுரம் / நீள் சதுரமாக(செவ்வகமாக) இருப்பது அவசியம். மனையின் வடிவம் சரியாக இல்லை என்றால் கட்டடம் கட்டும் முன் அதனை சீர்படுத்துவது சிறந்தது.
 
 (4) இயற்கையாகவே ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் இருந்தால் அந்த மனையை வாங்குவது சிறந்தது. 
 
 (5) மனையின் வடகிழக்கு பகுதியில் இயற்கையாகவே ஏரி, பொது குளம், பொது கிணறு இருந்தால் நல்லது. 
 
 (6) மனையின் தென்மேற்கு பகுதியில் இயற்கையாகவே குன்றுகள், தொலைபேசி கோபுரம், உயர்ந்த மரங்கள் இருந்தால் நல்லது.