வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (16:10 IST)

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

ஆதிகாலம் முதற்கொண்டு மனிதனின் நெருங்கிய வளர்ப்புப் பிராணியாக இருப்பவை நாய்கள். 


 

 
வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே. 
 
இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் வாஸ்து பரிகாரம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
 
நம்பித்தான் ஆக வேண்டும் எனது அனுபவங்கள் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 
 
ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது தளர்ச்சி கொண்டு முடிவு செய்கிறோம் அல்லவா? அதேபோல் சில வீடுகளில் ஆண் அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக கட்டுக்குள் அடங்கியிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல சிறிய பிரச்சனைகள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது. 
 
 யார் யார் பெண் நாய் வளர்க்கலாம்? 
 
என்னுடைய வீட்டில் வடக்கும் கிழக்கும் மூடி இருக்கிறது. வடக்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ ஒரு சன்னல் வைக்கக்கூட வழியில்லை என்பவர்கள் ஒரு பெண் நாய்க் குட்டியை எடுத்து வளர்க்கலாம். 
 
கிழக்குச் சுவர் மூடப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு வடக்கு வாசல் உள்ளது. வடக்கில் திறந்தவெளி உள்ளது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கும் பெண் நாயே ஏற்றது. 
 
வீட்டு ஆக்கினேய பகுதியில் (தென்கிழக்கு) கிணறு உள்ளது. அதை தற்சமயம் என்னால் மூட முடியாதே என்று வருத்தப்படுகிறவர்களுக்கும் இதே பதில்தான். 
 
எனக்கு இரண்டே இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அவனது மனைவிக்கு எப்பொழுதும் மருத்துவச் செலவுதான் என்று புலம்புவார்கள் பலர் உண்டு. இவர்களின் வீடுகளில் ஆக்கினேயப் பகுதி துண்டிக்கப்பட்டிருக்கும். இது பெண்களின் பகுதி. இப்பகுதி துண்டிக்கப்பட்டதாலலேயே அந்த வீட்டில் மருமகளாக வந்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்படும். இது போன்றவர்களுக்கும் பெண் நாயே சிறந்தது. 
 
 ஆண் நாய்களை யார் வளர்க்கலாம்? 
 
உங்கள் வீடோ, மனையோ ஆண்கள் பெயரில் இருந்து, ஈசானியம் மற்றும் வாயவியங்கள் திறந்திருந்து பெரிய அளவில் வாஸ்து கோளாறுகள் இல்லாமல் இருந்தாலும் ஆண் நாயை வளர்க்கலாம். 
 
 நன்றி: வாஸ்து, ரவி ஓஜஸ் டெக்னிக்