வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்: வைரல் வீடியோ

d
Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (13:25 IST)
உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை, கணவன் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாகன்பூர் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தன் மனைவியுடம் 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் பெல்டால் தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளான்.
 
இதனால் அந்த பெண் மயக்கமடைந்தாள். பின்னர் மயக்கமடைந்த மனைவியின் துப்பட்டாவை பயன்படுத்தி, கையை கட்டிபொட்டு கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அந்த வீடியோவை மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளான்.
 
இந்த வீடியோவை கண்ட பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து. போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 

நன்றி: ABP

webdunia

இதில் மேலும் படிக்கவும் :