1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (08:30 IST)

ஆனந்தன் என்கவுண்டர் ஏன்? தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்

நேற்று சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலு என்பவரை ஆனந்தன் உள்பட ரவுடிகள் கும்பல் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் ஆன்ந்தன் என்ற ரவுடி போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தை தற்போது பார்ப்போம்
 
நேற்று ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலு தாக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர்களை சுதர்சன் என்பவரின் தலைமையிலான தனிப்படை கைது செய்தது. இவர்களில் மூன்று பேர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். காவலர் ராஜவேலுவிடம் இருந்து பறிமுதல் செய்த வாக்கிடாக்கியை மீட்பதற்காக ஆனந்தனை போலீசார் அவருடைய இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.
 
வாக்கிடாக்கியை எடுக்கும் சந்தர்ப்பத்தில் திடீரென ஆனந்தன் ஆயுதத்தை எடுத்து போலீசார்களை தாக்கினார். இதில் இளையராஜா என்ற உதவி ஆய்வாளருக்கு காயம் ஏற்படட்து. மேலும் சில போலீசாரை ஆனந்தன் தாக்க முயற்சி செய்ததால் வேறு வழியின்றி தனிப்படை போலீசார் ஆனந்தனை என்கவுண்டர் செய்தனர். இது தவிர்க்க முடியாத காரணத்தால் ஏற்பட்ட என்கவுண்டர் என்று தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம் அளித்துள்ளார்