செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (12:50 IST)

ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கான நில ஒதுக்கீடு ரத்து - தமிழக அரசு அதிரடி

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் உரிமையை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை வித்தித்தது. 
 
இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என நேற்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை 2 வது யூனிட் விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலம் ஒதுக்கீடுக்காக பெறப்பட்ட தொகையை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திரும்ப தரப்படும் என சிப்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.