வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (20:17 IST)

இதுபோன்ற போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது - ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் நடைபெற கூடாது என்று ரஜினிகாந்த கூறியுள்ளார்.

 
கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
 
இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலை நிரந்தரமாக மூடுவதாக அரசாணையை பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
 
தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பே செய்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார்.