ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:03 IST)

விஜய்சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படத்தினை சிறப்பிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி  நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, குறுகிய கால இடைவெளிகளில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்டிற்கு  5,6 படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து விடுகின்றன. 

இதனால், ஹீரோவாகியாகிய குறுகிய காலக்கட்டத்திலேயே  25 வது படத்தை நெருங்கிவிட்டார் விஜய் சேதுபதி. இவரது 25 படமான சீதக்காதி அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

விஜய் சேதுபதியின் 25 வது படத்தினை சிறப்பிக்கும் விதமாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதில், விஜய் சேதுபதி ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

இதனையடுத்து இருவரும் இணைந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.