மகள் ஆராதனாவுடன் ரெமோ காஸ்டியுமில் சிவகார்த்திகேயன் - வைரல் போட்டோ

siva karthikeyan
Last Modified திங்கள், 8 அக்டோபர் 2018 (13:56 IST)
 
பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய அல்டிமேட் காதல் திரைப்படமான "ரெமோ" 24 AM ஸ்டூடியோக்களால் தயாரிக்கப்பட்டது. பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைதிருந்தார். 
ஒரு வலுவான தொழில்நுட்ப குழுக்களோடு உருவாகிய இந்த படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். 
 
ரெமோ படம் வெளிவந்து 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனாவும்  ஒன்றாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் ரெமோ படத்தில் பிரபலமான நர்ஸின் காஸ்டியுமில் உள்ளனர். 
 
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான "கானா" படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மகள் ஆராதனாவும் "வாயாடி பெத்த புள்ள "என்ற பாடல் பாடியிருந்தனர். திபு நின்னன் இசையமைத்திருந்த  அந்த பாடல்  வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகியது.


இதில் மேலும் படிக்கவும் :