1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 9 மார்ச் 2018 (15:18 IST)

இதற்கு ஏன் இந்த ஆலோசனை கூட்டம்? தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

 
காவிரி நதிநீர் விவகாரத்தில் வெகு நாட்கள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் 177.5 டிஎம்சி ஆக குறைக்கப்பட்டது. 
 
இதையடுத்து தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று நீர்வளத்துரை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அரசுப் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது:-
 
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது. 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.