1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 5 மார்ச் 2018 (16:28 IST)

எவ்வளவு நாட்களானாலும் சரி தமிழகத்தை விடமாட்டோம்; மத்திய அமைச்சர் அறிக்கை

எரியாவு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்தை விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் நிறைவேற்றுவோம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்


வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் எரிவாயுவை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூர் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வியல்களில் எரிவாயு குழாய் அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று தமிழக விவாசாயிகள் இந்த கெயில் திட்டத்திற்கு தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல போராட்டங்களும் நடைபெற்றது.
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்திய அரசு எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடமாட்டோம் என்று விடா பிடியாக உள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும்.
 
சுமூகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இத்திட்டம் குறித்து தமிழக அரசுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசின் வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விவசாயிகளுக்கு சரியான புரிதல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.