புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (17:58 IST)

எதற்கும் உதவாத எதிர்க்கட்சி: ஸ்டாலினை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார் என்பதும், கலாநிதி மாறன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெருங்கிய உறவினர் என்பது தெரிந்தும் 'எதற்கும் உதவாத எதிர்க்கட்சி' என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் சற்றுமுன் மதுரை மாநகர் முழுவதும் ஒரு பரபரப்பான போஸ்டரை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் 'தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர்க்கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி என்ற வாசகங்கள் உள்ளது. இந்த வாசகங்கள் அதிமுக மட்டுமின்றி திமுகவையும் விமர்சித்துள்ளதுதான் பெரும் ஆச்சரியம்

ஏற்கனவே 'சர்கார்' ஆடியோ விழாவில் விஜய்யை வார்த்தைக்கு வார்த்தை 'தளபதி' என்று கலாநிதி மாறன் பேசியது ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த போஸ்டர் பெரும் பிரச்சனையை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் விஜய்க்கும் கலாநிதி மாறனுக்கும் தெரியாமல் ஒட்டப்பட வாய்ப்பு இல்லை என்பதால் இருவரும் இணைந்து திமுக, அதிமுகவுக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்குவார்களோ என்ற ஊகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.