தல அஜித்தின் விஸ்வாசம் பட போஸ்டரை கவனிச்சீங்களா!
விஸ்வாசம் பட போஸ்டரை கவனிச்சீங்களா, அதுல தல அஜித் , ஹாய் ஆக ராயல் என்பீல்டு புல்லட் ஓட்டியபடி சிரித்துக்கொண்டே காணப்படுவார். அந்த புல்லட் வண்டி நம்பர் TN60 AB 2435 என்று இருக்கும். இந்த வண்டி நம்பர் தேனி மாவட்ட வாகன பதிவு எண் ஆகும்.
எனவே படத்தின் கதை தேனி மாவட்டத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் நடப்பது போன்று தான் விஸ்வாசம் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிராமத்து செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித் மதுரை வட்டார வழக்கு தமிழ் பேசி நடித்துள்ளார். இதற்கான டப்பிங் பணிகள் அண்மையில் நடந்து முடிந்தது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் தல அஜித் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.