1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (09:11 IST)

வழி தவறி எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை உபசரித்த இந்திய ராணுவத்தினர்

பாகிஸ்தானில் இருந்து வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு இந்திய ராணுவத்தினர் பரிசுகள் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.
எல்லைப் பிரச்சனையின் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் அவ்வப்போது சண்டை நடைபெறுவது வழக்கம்.
 
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அப்துல்லா(11) என்ற சிறுவன் வழிதவறி, காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். சட்டப்படியான நடவடிக்கைகள் முடிய 3 நாட்கள் ஆனதால், காஷ்மீர் ராணுவத்தினர் அச்சிறுவனை நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர். 
 
இந்திய ராணுவத்தினர் சிறுவனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்  போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.