வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : ஞாயிறு, 4 நவம்பர் 2018 (21:01 IST)

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வாக்குரிமை கிடையாதா? ராம்தேவ் சர்ச்சை பேச்சு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓட்டு போடும் வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று ராம்தேவ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் இன்று 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களது வாக்குரிமையை பறிக்க வேண்டும் என ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பல முக்கிய கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். குறிப்பாக எந்த தம்பதியும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்றும் அதை மீறினால் அவர்களது வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் இந்துக்கள் அனைவரும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியார் கூற, இன்னொரு பக்கம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் பெற்று கொள்ளக்கூடாது என்று இன்னொரு சாமியார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.