ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ப.சிதம்பரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பின்னர் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்தனர். அப்போது வீட்டில் பணிபுரிந்த வெண்ணிலா, விஜி ஆகிய இருவரின் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் அதன் பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.