1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (07:41 IST)

ப.சிதம்பரம் வீட்டில் நகை - பணம் திருடிய பெண்கள் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் நகை பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராப்ஸ் தோட்டச்சாலையில் உள்ளது.
 
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்த  ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் வைர நகைகளும் திருடுபோனதாக ஆயிரம் விளக்கு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 
 
புகாரின்பேரில் விசாரித்து வந்த போலீஸார் சிதம்பரத்தின் வீட்டில் கடந்த 10 வருடமாக வேலை செய்து வந்த சகோதரிகளான வெண்ணிலா, விஜி ஆகியோர் தான் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் திருடிய நகைகளையும், பணத்தையும் மீட்டனர். பின் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.