புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (22:08 IST)

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சிவசேனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உறவு சரியில்லாத நிலை இருந்தது. இதனால் கடந்த ஆண்டே இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் சிவசேனா அறிவித்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இருகட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டது.

இதன்படி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவர்களும் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பழைய கூட்டணி புதுப்பிக்கப்பட்டுள்ளதால் பாஜக கூட்டணி இந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது