திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:29 IST)

கும்பம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பாக்கிய  ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் வாடும் கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம்  பணவரத்து இருக்கும். மனகவலை  நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும்.
 
குடும்ப ஸ்தானத்தின் மீது சூரிய பகவானின் பார்வை விழுவதால், குடும்பத்தில் உங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் ஏதேனும் கோவிலுக்கு சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில்  இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
 
தொழில் ஸ்தானத்திற்கு மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவான் வருவதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் காண்பர். கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தற்போது அகலும். ஒரு நல்ல புரிதல் உங்களுக்குள் உருவாகுமாதலால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு உடலில் இருந்த பிரச்சனைகள் குறையும். இதனால் ஒரு சுறுசுறுப்பு ஏற்படு வேலைகளை கவனமுடன் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கணவனுடன் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மாணவர்கள் நீங்கள் காதில்கேட்கும் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். இதனால்  பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
 
கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம்.  வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன்  ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
 
அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம்.
 
சதயம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே  சிறுசிறு  மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்: பிரம்மாவிற்கு மஞ்சள் வாங்கித் தர கடன் பிரச்சனைகள் குறையும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9.
 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.