வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:47 IST)

மிதுனம் - மாசி மாத பலன்கள்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண  ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
அடுத்தவர் கஷ்டங்களை தாமாக புரிந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து  முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும்  அளிக்கும் முன் யோசிப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக  செயல்படுவது நல்லது.
 
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக  துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்  முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
 
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம்  தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.
 
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண்  வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
 
அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப்  பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
 
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.  கடன்கள் குறையும். கலைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள்.
 
திருவாதிரை:
 
இந்த மாதம் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்  தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு  சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது  நல்லது.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
 
இந்த மாதம் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும்.  முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும்.  தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.
 
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி24, 25
 
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்3, 4.