வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:35 IST)

மேஷம் - மாசி மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
குடும்பத்தில் சந்தோஷத்தை பெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக  ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
 
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை  காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி  மகிழ்வீர்கள்.
 
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய  வெற்றிக்கு உதவும்.
 
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து  வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
 
அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள்  விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.
 
அஸ்வினி:
 
இந்த மாதம்  சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை கடனாகக்  கொடுப்பதைத் தவிர்த்து சிந்தித்துச் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
 
பரணி:
 
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சுமாராகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
இந்த மாதம்  சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், உயரும்.
 
பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி20, 21
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 26, 27.