"ஆர் யூ எ வெர்ஜின்" வெளியானது நேர்கொண்ட பார்வை ட்ரைலர்!

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (18:14 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியானது. 
 
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையான வித்யா பாலன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான  நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.  இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :