1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By VM
Last Updated : திங்கள், 4 மார்ச் 2019 (16:09 IST)

இளைஞர்களை ஈர்க்க வரும் 'ஜுலை காற்றில்' டிரெய்லர்! கண்களின் ஓரமாய் பாடலை வெளியிட்ட கார்த்தி!

கேசி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜுலை காற்றில். இந்த படத்தில் ஆனந்த் நாக்,  அஞ்சு குரியன் சம்யுக்தா மேனன், சதீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


 
காவ்யா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ளார். டிமல் சேவியர் எட்வெர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.  
 
இந்நிலையில் ஜுலை காற்றில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இயக்குனர் கேஎஸ் ரவிகுமார், நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.  இந்த விழாவில்  நடிகர் கார்த்தி கண்களின் ஓரமாய் என்ற பாடலை வீடியோவை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஜுலை காற்றில் படத்தின் டிரெய்லரும் வெளியானது.
 
 
கண்களின் ஓரமாய் பாடல்
 
 
 
ஜுலை காற்றில் டிரெய்லர்