செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (21:43 IST)

சிவகார்த்திகேயன் ரஜினி சாரை ஞாபகப்படுத்துகிறார்: பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்

பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் சிவகார்த்திகேயனை வெகுவாக புகழ்ந்துள்ளார்.


 
18 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'என் சுவாச காற்றே' படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்தவர் இஷா கோபிகர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  18 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இஷா, இப்போது நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமாரின் அறிவியல் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல, நம்ம சிவகார்த்திகேயனே தான்.
 
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பது குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்று இஷா கோபிகரிடம் கருத்து கேட்டது. அப்போது அவர் கூறுகையில், சிவகார்த்திகேயனுடன் நான் நடித்து வரும் இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே துவங்கிவிட்டது. இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.


 
இந்த படத்துக்கு முன்பு ஏலியன் கதைகள் எதுவும் தமிழ் சினிமாவில் வெளிவந்ததாக தெரியவில்லை.  பாலிவுட்டில் கூட ஜடு இன் கோய், மில் கயா உள்ளிட்ட படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்துடன் ஷுட்டிங்கும் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் ரஜினிசாரை ஞாபகப்படுத்துகிறார்.   ரஜினியைப் போல் இருக்கும் சிவாவின் மேனரிசம், அவருடைய நடவடிக்கை, பேச்சு, நடை, பார்வை எல்லாமே ரஜினி மாதிரி இருக்கிறது என்றார்.