திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (16:38 IST)

ஒரு தடவ உண்மைக்காக நின்னு பாரு... நாகசைதன்யாவின் கஸ்டடி படத்தின் ட்ரைலர்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகசைதன்யா பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
வருகிற மே 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலரில் "ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்" என நாகசைதன்யா பேசும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.