1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:24 IST)

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பயிற்சியின் போது விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக பந்துகளை அடித்துள்ளார். அப்படி அவர் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தின் ஓய்வறைய சுவரை பதம் பார்த்துள்ளது.

இது சம்மந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அதனால் இந்த தொடரில் இருந்தாவது அவரின் டெஸ்ட் ஃபார்ம் மீண்டும் வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.