வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (20:45 IST)

சூர்யாவின் 'என்.ஜி.கே' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கம்போல் இயக்குனர் செல்வராகவனின் தாமதம் காரணமாக இந்த ப்டத்தின் ரிலீஸ் தேதி உள்பட எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து படக்குழுவினர்களை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் ரசிகர்களை திருப்திப்படுத்த இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒரு தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்காக ஒரு பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும், அந்த பாடலை ஸ்ரேயாகோஷலும், சித்ஸ்ரீராமும் பாடியுள்ளதாகவும் இன்று இந்த பாடலை ஒலிப்பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் படத்தில் இந்த பிரபல இரண்டு பாடகர்கள் இணைந்துள்ளதால் இந்த படத்தில் ஒரு மெலடி பாடல் உறுதி என தெரிகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.