வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (20:49 IST)

உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு சூர்யா செய்த நற்செயல்!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த  ரசிகர் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா, ரசிகருடைய மகளின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். கடந்த 13-ந் தேதி மணிகண்டன் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார்.
 
இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா நேற்று இரவு மணிகண்டன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக காரில் ஆத்தூர் வந்தார். மணிகண்டனின் மனைவி தேன்மொழி, மகள் பிரதீபா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
 
பின்னர் அவர் குடும்பத்தினரிடம் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த மணிகண்டன் இறந்துவிட்டார். அவரது இழப்பு எங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மகளின் படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
 
மேலும் , இந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.
 
இதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
 
நடிகர் சூர்யா இரவு 10 மணிக்கு மேல் யாருக்கும் தெரியாமல் ஆத்தூருக்கு ரகசியமாக வந்து ரசிகர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றது எப்படியோ சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.