1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (09:56 IST)

இப்படி செய்யலாமா பாஸ்? முன்னணி இயக்குனரை பந்தாடும் யுவன்!

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலிஸ் ஆகாமல் உள்ளது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் ரிலிஸாகவில்லை. இது சம்மந்தமாக யுவனுக்கும் சீனு ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தை இயக்குனரின் அனுமதி இன்றி யுவன் மறு படத்தொகுப்பு செய்ததாகவும், சில பாடல்களை நீக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அறிந்து அவரை சந்திக்க சென்ற சீனு ராமசாமியையும் அவர் சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் சீனுராமசாமி யுவன் மீது அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு