1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (12:00 IST)

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தகவல்!

விஜய் சேதுபதி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களான லாபம், அனபெல் சேதுபதி மற்றும்  துக்ளக் தர்பார் ஆகிய மூன்று படங்கள் கடந்த மாதம் வரிசையாக வெளியாகின என்பது மூன்றும் மிகவும் சுமாரான படங்கள் என்ற விமர்சனத்தைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள அடுத்த படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் ரிலீஸ் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் நிவாஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படமாவது விஜய்சேதுபதிக்கு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்