செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 ஜூன் 2021 (23:45 IST)

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இளம் நடிகர் !

நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார். இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்து இளம் நடிகர் காளிதாஸ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படத்தில் ஒரு பகுதியான தங்கம் என்ற வெப் தொடரில் மிகத்திறமையாக நடித்திருந்தார் காளிதாஸ்.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக தான்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.