திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (22:28 IST)

புதிய வெப் தொடரால் நடிகை சமந்தா நெகிழ்ச்சி....

சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தி ஃபேமிலி மேன் தொடர் தமிழ் இனத்திற்கு போராடிய இயக்கத்தின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக சேரன், சீமான் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு வரவேற்புக் கிடைத்துள்ளதால் சமந்தா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற விரைவில் அமேசான் பிரைமில் நாளை ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ரிலீஸாகியுள்ளது.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது.

இத்தொடரில் நடித்தது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு வந்துள்ள விமர்சனங்கள், பாராட்டுகள்  அனைத்தும் என் இதயத்திற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு நீண்ட  பதிவிட்டுள்ளார்.

இதற்கு நிறைய பேர் கமெண்ட் செய்து வருகின்றனர். தி ஃபேமிலி மேன் தொடரில் அவர் இயக்குநர் இணைந்து நடிப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.