திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (14:26 IST)

மீண்டும் நயன்தாரா படத்தில் யோகிபாபு

நயன்தாரா நடிக்கும் ஐரா படத்திலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மாயா, டோரா, அறம்,  கேலாமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் புதிய படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.  குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கும் ஐரா என்ற இந்த படத்தில், நயன்தாராவுடன் கலையரசன், ஜெயபிரகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இப்படம் ஹாரர் படமாக இருக்கும் என தெரிகிறது.
 
இந்நிலையில் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணைந்துள்ளாராம். கடைசியாக வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு நடித்திருந்தார். இதையடுத்து இரண்டாம் முறையாக ஐரா படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.