யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்ட 'சகலகலா வள்ளி' சிங்கிள் டிராக் வெளியீடு

VM| Last Updated: சனி, 12 ஜனவரி 2019 (15:06 IST)
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி உள்ள கழுகு 2 படம் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சகலாகலா வள்ளி பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது.


 
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகுவது இப்போது அதிகரித்து வருகிறது.
 
பில்லா 2, கலகலப்பு 2, சிங்கம் 3, சண்டகோழி 2  வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. என்ற பெயரில் தயாராகி வருகிறது..

கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வரும் இப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவாவே இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.   இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நடக்கும் முக்கிய பிரச்னையே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் வெளியாகி உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :