1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (19:09 IST)

அருண் விஜய்யின் 36வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. ’தல’ டைட்டில் வச்சிருக்காரே..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தின் இயக்குனர் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் அடுத்த படத்தில் தான் அருண் விஜய் நடிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரெட்ட தல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அட்டகாசமாக ஆக்சன் போஸ் கொடுத்துள்ள அருண் விஜய்யின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்யானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva