திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (14:24 IST)

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த கஜினிகாந்த படக்குழு; மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 2வில் தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐஸ்வர்யாவின் ஏகாதிபத்திய ராணி அதிகாரத்தின் கீழ் இருந்த போட்டியாளர்களை சற்றே கலகலப்பாக்க, பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்  கஜினிகாந்த படக்குழுவினர்.
வார இறுதி நாட்களில் மட்டும் கமல் வருவதால் டிஆர்பி லெவல் ஏறுவதாக நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே   பிரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் கடைகுட்டி சிங்கம் படத்தின் நடிகர் கார்த்தி, சூரி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பட பிரோமோஷனுக்காக, ஆர்யாவின் கஜினிகாந்த படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டில் நுழையும் ப்ரோமோ வீடியோ  வெளியாகியுள்ளது. அதில் ஆர்யாவுடன் விஜய் டிவி புகழ் டிடி மற்றும் காமெடி நடிகர் சதீஷ், நாயகி சாயிஷா ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். எனவே  இவர்கள் வருகையால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தவர் சதீஷ். இப்படக்குழுவின் வருகையால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.