செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை; வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 2 அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை என்று ஒரு சாராரும் தெரிவித்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களில் மட்டும் கமல் வருவதால் டிஆர்பி லெவல் ஏறுவதாக நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே  பிரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் கடைகுட்டி சிங்கம் படத்தின் நடிகர் கார்த்தி, சூரி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் வந்தனர்.
 
இதனை தொடர்ந்து தற்போது விரைவில் வெளியாக உள்ள கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் படக்குழுவினர் செல்ல இருப்பதாக தெரிகிறது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை பூஜா குமார், பிக்பாஸ் வீட்டின் அருகே எடுத்து  கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும் உள்ள கமல், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.