1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (17:38 IST)

பிரபல நடிகரின் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க கால அவகாசம்!

பிரபல மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் திலீப். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னணி நடிகையைக் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கும் விசாரணையை முடிக்கவில்லை. எனவே மேலும் 6 மாதம் காக அவகாசம் கேட்டு தனி நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.
 
இம்மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிமன்றம் இவ்வழக்கை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் இக்கால அவகாசம் நீட்டிக்கப்பட ,மாட்டாது எனக் கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இவ்வழக்கில் 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.