வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (13:53 IST)

வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த தடை: உச்சநீதிமன்றம் அதிரடி!

உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த தடை விதித்துள்ளது. 

 
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் ஒரு பக்கமும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு இன்னொரு பக்கமும் பிடிவாதமாக இருப்பதன் காரணமாகவும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே உள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து ஒன்று தீர்ப்பு வழங்க இருந்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க குழு அமைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.