செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (12:04 IST)

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஜோடி போடும் நடிகை

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஒரே நடிகை ஜோடியாக நடிக்கிறார்.

 
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடிக்கும்  இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று  வருகின்றன. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில், போலீஸாக நடித்துள்ளார் கார்த்தி.
 
இதைத் தொடர்ந்து, மறுபடியும் ஒரு படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். இயக்குநர் கண்ணனிடம் உதவியாளராக இருந்த ரஜத், இந்தப் படத்தை இயக்குகிறார். அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். அந்தப்  படம் முடிந்ததும், அடுத்த வருடத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. சூர்யா ஜோடியாகவும் ஒரு படத்தில் ரகுல்  கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.