சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (13:30 IST)

வெடிக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சர்ச்சை… ராக்குடன் மோதும் வின் டீசல்!

ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படத்தின் 9 aஆம் பாகம் உருவாகி வருகிறது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாகம் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமான நிலையில் தற்போது ஜூன் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வின் டீசல் மற்றும் ராக் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போதே இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. வின் டீசல் ராக்கிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இதுபற்றி பேசியுள்ள வின் டீசல் ‘அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் கடினமானது. அதற்காக நான் ஒரு தயாரிப்பாளராக அவரிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டி இருந்தது. ஒரு படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்கான நடிப்பை பெற நான் எதையும் செய்வேன்.’ எனக் கூறியுள்ளார்.