புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (19:29 IST)

’மாநாடு’ சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்தார் யுவன்ஷங்கர் ராஜா!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு ஆகியவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜூன் 21 என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது