1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (10:58 IST)

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லலாமா? நீங்களே சொல்லுங்க நண்பர்களே… ஜி பி முத்து !

இணையப் பிரபலம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்லப் போவதாக ஒரு செய்தி இணையத்தில் உலாவி வருகிறது.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளப் போவதாகவும் அது சம்மந்தமான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது உண்மையா என்பது தெரியாத நிலையில் இப்போது ஜி பி முத்துவே அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து ‘நான் பிக்பஸ் வீட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என நீங்களே சொல்லுங்க நண்பர்களே ‘ எனத் தனது பாலோயர்ஸ்களைக் கேட்டுள்ளார்.