1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (13:43 IST)

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

விஜய் டிவியில் குக் வித் கோமாளி கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நான்காவது வாரம் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் கடந்த மூன்று வாரமும் எலிமினேஷன் என்பதே இல்லாமல் இருந்த நிலையில் குக்குகள் ஜாலியாக சமைத்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கோமாளி அளவுக்கு கூட சமைக்க தெரியாத ஷாலின் ஜோயா தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் ஹாட்ஸ்டாரில் இன்று காலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த வாரம் எலிமினேஷன் ஆனது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. தனக்கு சுத்தமாக சமையல் தெரியாது என்று ஆனாலும் ஒரு ஆர்வத்தால் மனைவியிடம் சமையல் கற்றுக் கொண்டு கலந்து கொண்டேன் என்றும் இந்த குடும்பத்திலிருந்து பிரிவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் இன்று எலிமினேஷன் ஆன ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல் கூறிய செஃப் தாமு மீண்டும் வைல்ட் கார்டில்  வந்து நீங்கள் உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
 
Edited by Siva