திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:51 IST)

'கனா' படத்தில் 'நெல்சன் திலீப்குமார்' பெயர் வைத்தது ஏன் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படமான 'கனா' படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனும் ஒரு திருப்புமுனை கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், இந்த கேரக்டர் சிறப்புத்தோற்றத்தையும் தாண்டி, படத்தின் கதைக்கு தேவையான ஒரு முக்கிய கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'நெல்சன் திலீப்குமார் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக படக்குழுவினர் நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த பெயரை ஏன் தேர்வு செய்தார்? என்பதற்கு ஒரு காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும், அதனை மறைமுகமாக உணர்த்தவே 'கனா' படத்தில் இந்த பெயரை அவர் தேர்வு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 'நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவர் என்பதும் இருவரும் விஜய் டிவியில் பணிபுரிந்தபோதே நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.