வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (20:09 IST)

அதிமுக சர்காருக்கு பணிந்துவிட்டதா விஜய்யின் 'சர்கார்?

விஜய் நடித்த சர்கார்' படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களில் ஒன்று 'இலவசம் வேண்டாம்' என்பது. இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாட்டையடியாக அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சி ஒன்று இந்த படத்தில் உள்ளது.

விஜய் போன்ற மாஸ் நடிகர் மூலம் இந்த கருத்தை கூறினால்தான் பெரும்பாலான மக்களிடம் போய் இந்த கருத்து சேரும் என்ற வகையில் இந்த காட்சியை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அமைத்துள்ளார்.

ஆனால் தற்போது அதிமுகவின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த காட்சியை நீக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த காட்சியை நீக்குவதன் மூலம் இந்த கருத்தையே படக்குழுவினர் வாபஸ் பெற்றுக்கொள்வதாகத்தான் எண்ண தோன்றுகிறது. வியாபர ரீதியாக எடுக்கப்படும் ஒரு படத்தில் பரபரப்புக்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து அந்த காட்சியின் மூலம் இலவச விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த காட்சியை பிரச்சனை வந்தால் நீக்கவும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உண்மையாகவே மக்களின் விழிப்புணர்ச்சிக்காக அந்த குறிப்பிட்ட காட்சியை வைத்திருந்தால் காட்சியை நீக்க முடியாது என்று கூறி நியாயம் தேடி நீதிமன்றம் செல்லலாமே? என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் அதிமுகவின் சர்காருக்கு விஜய்யின் சர்கார் மீண்டும் ஒருமுறை பணிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.