1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (22:42 IST)

தல அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் யார்?

தல அஜித் நடிக்கும் 60வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்திற்கு ’வலிமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் திரிஷா ஆகிய நால்வர் பரிசீலனையில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறின. ஆனால் தற்போது வந்துள்ள செய்தியின்படி ’வலிமை’ படத்தில் ஹீரோயின் இல்லை என்பதுதான் உண்மையான தகவல் என அப்படத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
எச்.வினோத் இயக்கிய ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் ரகுல் பிரீத்திசிங் கேரக்டர் வலிய திணிக்கப்பட்டு இருந்ததால் அந்த படத்தின் விறுவிறுப்பு குறைந்ததாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், இந்த படமும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதால் ரொமான்ஸ் மற்றும் காமெடிக்கு இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க ஆக்ஷனில் களமிறங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம் 
 
எனவே ’வலிமை’ படத்தில் ஹீரோயின் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ’நேர்கொண்டபார்வை’ திரைப்படம் போல் ஒரு சின்ன பிளாஷ்பேக் வைத்து அதில் ஒரு ஹீரோயினை வைக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. அவ்வாறு ஹீரோயின் பிளாஷ்பேக்கில் வைப்பது முடிவு செய்யப்பட்டால் இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க நடிக்க வைக்கலாம் என்று போனிகபூர் ஆலோசனை சொல்ல அதனை எச்.வினோத் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே ’நேர்கொண்டபார்வை’ திரைப்படம் போலவே ’வலிமை’ படத்திலும் ஹீரோயின் பிளாஷ் பேக்கில் மட்டுமே வருபவராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது