புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (13:08 IST)

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாஸ் காட்டிய தல - தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல வித்தைகளை கையாண்டு திறைமைகளை வளர்த்துள்ளார்.  சினிமாவில் நுழைவதற்கு முன்பே கார் ரேஸர் வெறியர் என்றே கூறலாம். 


 
அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார்.  அஜித் பைக் ரேசர் மற்றும் போலீஸ் என இரு வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்கு AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் படுபிசியாக இருந்து வந்தாலும் இடையிடையே தனக்கு பிடித்த விஷயங்களில் அஜித் தொடர் சாதனை படைத்தது வருகிறார். 
 
அந்தவகையில் கடந்த வருடம் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார். அதோடு பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அதில் அஜித்தின் ட்ரோன் குழு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது. அடுத்தபடியாக தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் தீவிரம் காட்டி வரும் அண்மையில் அஜித் இதற்காக டெல்லி சென்றிருந்தார். 


 
அப்போது அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் ஸ்டேண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 195 புள்ளிகள் பெற்று 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில்  200 புள்ளிகளை பெற்று டாப் 10 இடங்களில் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், ஃப்ரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளார். அஜித்தின் இந்த புதிய சாதனையை அவர் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி  வருகின்றனர்.